Surprise Me!

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! உற்சாகத்தில் சுற்றுலா பயணிகள்!

2025-05-20 22 Dailymotion

<p>தருமபுரி: தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 8000 கனஅடியாக உயர்ந்துள்ளது.</p><p>தமிழ்நாட்டில் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்  கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.</p><p>ஒகேனக்கல் ஆற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்வரத்து 700 கன அடியாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து, நேற்று (மே 19) 5 ஆயிரம் கன அடியாக இருந்தது. இன்று (மே 20) மேலும் அதிகரித்து, காலை 8 மணி நிலவரப்படி 8000 கன அடியாக உள்ளது.  </p><p>தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, சினி அருவியில் உள்ளிட்டவற்றில் குளித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து, பரிசல் பயணம் செய்தும் கோடை விடுமுறையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.</p>

Buy Now on CodeCanyon