Surprise Me!

போரூர் பூங்காவில் புல்லட் திருட்டு - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

2025-05-21 41 Dailymotion

<p>சென்னை: போரூர் ஈரநில பசுமை பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னை, காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிவ நாராயணன் (30). இவர் தனது நண்பர்களுடன் அண்மையில் போரூரில் திறக்கப்பட்ட ஈரநில பசுமை பூங்காவிற்கு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு, பூங்காவில் வாகனத்தை நிறுத்திவிட்டு, நடை பயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து, நடை பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளார்.  </p><p>அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பூங்கா முழுவதும் வாகனத்தை தேடியுள்ளார். ஆனால், வாகனம் கிடைக்காததால் இதுகுறித்து போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், போலீசார் பூங்காவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.</p><p>இதில், அடையாளம் தெரியாத நபர் வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து வாக்னத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். </p>

Buy Now on CodeCanyon