Surprise Me!

ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

2025-06-16 11 Dailymotion

<p>கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் கவியருவியில் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.</p><p>கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது கவி அருவி. இங்கு, உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும்.</p><p>இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, பேரிடர் குழு தீவிர பணியில் ஈடுபட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் மழைப் பொழிவதால், ஆழியார் கவியருவியில் திடீர் திடீர் காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.</p><p>இது குறித்து வனத் துறையினர் தெரிவிக்கையில், “கனமழை காரணமாக கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியின் தண்ணீர் வரத்து தொடர்ந்து கண்காணித்து வரப்படுகிறது. தண்ணீர் வரத்து குறைந்தவுடன் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும். காற்றுடன் கனமழை பெய்து வருவதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தனர். </p>

Buy Now on CodeCanyon