<p>ரஷ்யாவின் கடலோர பகுதிகளில், சுனாமி அலைகளால் பெரிய கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால், ரஷ்யாவின் கிழக்கே தொலைவில் அமைந்த வடக்கு குரில் தீவு பகுதிகளில் உள்ள சகாலின் பகுதியில் இன்று அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டது. கடலோரத்தில் இருந்த கட்டிடங்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டன. அதுபற்றிய வீடியோவும் வெளியானது. <br> </p>