Surprise Me!

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!

2025-08-01 4 Dailymotion

<p>ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.</p><p>சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மல்லன்குழி அருகே வனப் பகுதியில் இருந்து வெளியேறிய‌ இரு காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வந்துள்ளன. விளை நிலங்களில் யானைகள் நடமாடுவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.  </p><p>பொது மக்களின் சத்தம் கேட்ட காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்ற சென்றன. இதனிடையே, அந்த பகுதியில் பெரிய அளவிலான குழிகள் இருந்ததால், யானைகளை குழிக்குள் இறங்க வேண்டாம், பத்திரமாக போகும்படி அங்கிருந்த மக்கள் அறிவுறுத்தினர்.</p><p>மேலும், பகல் நேரங்களில் ஊருக்குள் நுழையும் யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>

Buy Now on CodeCanyon