<p>திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள புனித யோவான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் கடையில் கிடைக்கும் சாதாரண மோதிரத்தை வாங்கி கை விரலில் அணிந்துள்ளார். இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து இன்று காலை மாணவர் மோதிரம் அணிந்திருந்த கை விரலில் வீக்கம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். </p><p>மேலும், அந்த மோதரத்தை கை விரலில் இருந்து அகற்றுவதற்காக முயற்சி செய்துள்ளார். ஆனால், விரலில் அதிக வலி ஏற்பட்ட நிலையில் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் மோதிரத்தை கழற்ற முடியாததால் மருத்துவர்கள் பெற்றோரை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.</p><p>இதையடுத்து பெற்றோர் மாணவரை பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீயணைப்பு துறையினர் இரும்பு கம்பிகளை அறுப்பதற்கு பயன்படுத்தும் கிரைண்டிங் இயந்திரம் மூலம் விரலில் மாட்டிக் கொண்டிருந்த மோதிரத்தை பாதுகாப்பாக வெட்டி எடுத்தனர். தொடர்ந்து இது போன்று விரலுக்குப் பொருந்தாத மோதிரங்களை அணிய வேண்டாம் எனவும் அதிகாரிகள் மாணவனுக்கு அறிவுரை வழங்கினர். இதையடுத்து, விரலில் மாட்டிக் கொண்ட மோதிரத்தை அகற்ற முடியாமல் இரண்டு நாட்களாக தவித்து வந்த மாணவனுக்கு உதவிய தீயணைப்பு வீரர்களுக்குப் பெற்றோர் நன்றி கூறினர்.</p>