Surprise Me!

திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் தோகை விரித்து அடிய மயில்; வைரலாகும் காட்சி!

2025-08-08 5 Dailymotion

<p>தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கண்னுக்கு காட்சி தரும் விதமாய் இன்று அதிகாலை நேரத்தில் மயில் தோகை விரித்தாடிய காட்சி வைரலாகி வருகிறது.</p><p>முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருகோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்கி வரும் நிலையில் இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் மேற்கொள்வார்கள்.</p><p>அதே போல் திருச்செந்தூர் கோயில் மற்றும் கோயிலை சுற்றியுள்ள வளாகப் பகுதிகளில் அதிகளவில் மயில்களும் காணப்படுகின்றன. குறிப்பாக, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மயில்கள் தோகை விரித்து ஆடும் காட்சிகளை பார்த்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை கோயில் முன்புள்ள சண்முக விலாசம் மண்டப மேல்தளத்தில் மயில் ஒன்று தோகையை விரித்தபடி ஆடிக் கொண்டிருந்தது.  </p><p>மேலும் பக்தர்கள் புகைப்படம் எடுப்பதை பார்த்து அதற்கு ஏற்றபடி அங்கும் இங்குமாக ஆடியபடி தனது தோகையை விரித்து ஆடியது. இதை கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தும் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் சிலர் தங்களது குழந்தைகளுக்கு மயிலை காட்டி மகிழ்ந்தனர்.</p>

Buy Now on CodeCanyon