Surprise Me!

79-வது சுதந்திர தின விழா! தஞ்சை பெரிய கோயிலில் மின் விளக்குகளில் ஒளிரும் தேசிய கொடி!

2025-08-11 18 Dailymotion

<p>தஞ்சாவூர்: இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மின் விளக்குகளால் ஒளிரும் மூவர்ணக் கொடி அமைக்கப்பட்டுள்ளது. </p><p>வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய சின்னங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் மீது வண்ண விளக்குகளால் ஒளிரும் மூவர்ணக் கொடி அமைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. </p><p>அதன்படி, தமிழ்நாட்டில் உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் திருமயம் கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், இந்திய தொல்லியல் துறை திருச்சி கோட்டத்தின் சார்பில், மின் விளக்குகளால் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அதில் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயிலில் ராஜராஜ நுழைவாயிலின் இடதுபுறம் ப்ரொஜெக்டர் மூலம் தேசியக்கொடி ஒளிர செய்யப்பட்டுள்ளது. இதனை கோயிலுக்கு வருகை புரிந்த பொதுமக்கள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்துச் சென்றனர்.</p>

Buy Now on CodeCanyon