முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் முதல்வர் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.30.16 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனியாக வசித்து வரும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முதல்வர் தாயுமானவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. <br /> <br />#mkstalin #CMMKSTALIN #Tamilnaducmmkstalin #Thayumanavanthittam<br /><br />~ED.67~