Surprise Me!

“அண்ணே.. அண்ணே வண்டிய நிறுத்துங்க” - லாரியை வழி மறித்து கரும்பை சுவைத்த யானைகள்!

2025-08-14 5 Dailymotion

ஈரோடு: காரப்பள்ளம் வனத்துறை சோதனைச்சாவடி அருகே லாரியை வழி மறித்த காட்டு யானைகள் கரும்பை ருசி பார்த்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில், யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், கரும்பை ஏற்றிச் செல்லும் லாரிகளை தேடி, அடர்ந்த வனத்திலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது.

அந்த வகையில், இன்று சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், காரப்பள்ளம் வனச் சோதனைச் சாவடி அருகே, கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியை யானைகள் வழிமறித்தன. லாரியை நிறுத்திய காட்டு யானைகள், தனது தும்பிக்கையால் கரும்பை எடுத்து ருசி பார்த்தன.

நீண்ட நேரமாக லாரியை வழி மறித்து அட்டகாசம் செய்த யானைகள், கரும்புகளை தனது குட்டியுடன் சாப்பிட்டன. சாப்பிட்டு முடித்ததும், சிறிது நேரம் கழித்து யானைகள் காட்டுக்குள் சென்றன. இதனால், லாரி ஒட்டுநர் மற்றும் சாலையிலிருந்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் மூழ்கினர். இந்த காட்சியை பேருந்தில் இருந்த ஒரு பயணி வீடியோவாக எடுத்து, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமீப காலமாகவே தாளவாடி வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், யானைகள் நடமாட்டத்தை வாகன ஓட்டிகள் செல்ஃபி, வீடியோ போன்றவை எடுக்கக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Buy Now on CodeCanyon