Surprise Me!

தூத்துக்குடியில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா!

2025-08-15 5 Dailymotion

தூத்துக்குடி: நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

79வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். இதையடுத்து காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க: திமுக கழக முன்னோடிகளை பார்த்தால் பொறாமையாக உள்ளது - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதனையடுத்து காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 69 பேருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். பின்னர் அனைத்து துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு சுமார் ரூ.2.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Buy Now on CodeCanyon