<p>கோயம்புத்தூர்: ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 119.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2138 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. </p><p>இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அணைக்கு சென்று துணி துவைக்கவோ, குளிக்கவோ, ஆற்றின் கரையோரம் ஆடு மாடுகளை மேய்க்கவோ செல்லக்கூடாது என நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. </p><p>வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. </p>