<p>தேனி: தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 100 கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று, அதன் 100வது கிளையை கம்பம் பகுதியில் இன்று புதிதாக தொடங்கியது. இந்த நூறாவது கிளையை மலையாள திரைப்பட நடிகை அபர்ணா தாஸ் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக வருகை தந்த நடிகை அபர்ணா தாஸுக்கு தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p><p>அதனைத்தொடர்ந்து அபர்ணா தாஸ் பேசுகையில், ”தேனி மாவட்டம் கம்பத்திற்கு நான் வருவது இதுவே முதல் முறை. வரும் வழியில் இயற்கை சூழல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது” என்று கூறினார். தமிழில் நடிகர் விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் துணை நடிகையாகவும், டாடா படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.</p><p>தனியார் நிறுவனத்தின் கிளையை திறந்து வைத்த நடிகை அபர்ணா தாஸை காண பொதுமக்கள், ரசிகர்கள் வருகை தந்த நிலையில் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.</p>