Surprise Me!

அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்.. விபத்தில் தீக்கிரையான சொகுசு கார்!

2025-08-17 11 Dailymotion

<p>விழுப்புரம்: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில், ஒரு சொகுசு கார் மட்டும் தீப்பற்றி மளமளவென எரிந்தது.</p><p>ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முரளி மாணிக்கம் என்பவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் 3 நாள் விடுமுறை முடித்து, சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக, முரளி பிரேக் போட்டுள்ளார். ஆனால், முரளியின் கார் பின்னால் வந்த 2 கார்கள் அடுத்தடுத்து மோதி நின்றுள்ளது.</p><p>இந்த விபத்தில், நடுவே இருந்த கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அதனைக் கண்டு சுதாரித்துக் கொண்ட நபர்கள், உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தீப்பற்றிய காரை திருச்சியை சேர்ந்த சரண்குமார் என்பவரும், அதன் பின்னால் வந்த இன்னொரு காரை திட்டக்குடியை சேர்ந்த பாரஸ் என்பவரும் ஓட்டு வந்துள்ளனர். மூன்று கார்களும் அதிவேகமாக மோதிக் கொண்டதால், நடுவே இருந்த காரில் பெட்ரோல் லீக்-ஆகி தீப்பற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது.</p><p>தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத் துறையினர், காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால், கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. மேலும், சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, விரைந்து செயல்பட்ட போலீசார், சாலையை ஒருவழிப்பாதையாக மாற்றியதால் வாகனங்கள் அப்பகுதியிலிருந்து சென்றது.</p>

Buy Now on CodeCanyon