Surprise Me!

அதிமுக கூட்டம் நடுவே கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆட்டோவிற்கு வழி ஏற்படுத்தி கொடுத்த தொண்டர்கள்!

2025-08-22 7 Dailymotion

<p>காஞ்சிபுரம்: இபிஎஸ் உரையாற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் மருத்துவமனைக்கு செல்ல அந்த வழியாக ஆட்டோவில் வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அதிமுக தொண்டர்கள் வழி ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.</p><p>தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த சுற்றுப் பயணத்தில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார்.</p><p>நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட குமரகோட்டம் முருகன் கோயில் அருகே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு வந்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் இபிஎஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த வழியாக கர்ப்பணி ஒருவரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்தது.</p><p>ஆட்டோவில் கர்ப்பிணி இருப்பதை பார்த்த கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள்  உடனடியாக கூட்டத்திற்கு இடையே வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி பெண் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.</p>

Buy Now on CodeCanyon