<p>தஞ்சாவூர்: பன்னிரு திருமுறைகளை தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி நால்வர் வீதி உலா சிவனடியார்களுடன் சிறப்பாக நடைபெற்றது.</p><p>தஞ்சை சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் சார்பில் இரண்டாம் ஆண்டாக தஞ்சாவூரில் நால்வர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. சைவ சமயத்தை வளர்த்த சைவ சமய குறவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வர் உருவத் திருமேனியுடன் பன்னிரு திருமுறைகளை சிவனடியார்கள் தலையில் சுமந்தபடி கயிலாய வாத்திய இசை முழங்க உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் திருவீதி உலா நடைபெற்றது. சிவனடியார்கள் திருவாசகத்தின் பதிவுகளை பாடி பஞ்சநாதம் உள்ளிட்ட சிவ வாத்தியங்கள் முழங்க வீதி வலம் வந்தனர். </p><p>இந்த வீதி உலாவை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு தஞ்சையின் ராஜ வீதிகளில் தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி வீதி உலா வந்தனர். மேலும், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.</p>