Surprise Me!

காஞ்சிபுரத்தில் சினிமா பாணியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி!

2025-08-26 13 Dailymotion

<p>காஞ்சிபுரம்: தனியார் பள்ளி தாளாளர் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது சினிமா பாணியில் நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியின் தாளாளராக இருப்பவர் அருண்குமார். இவரது மகன் மருத்துவர் கௌசிக்குமார் மற்றும் மருத்துவர் சிவநயா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு கோலாகலமாக நடைபெற்றது.</p><p>அந்த நிகழ்ச்சியில் மணமக்களை 20 அடி உயரம் கொண்ட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து, உறவினர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். மேலும், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டத்தோடு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.</p><p>அதனைத் தொடர்ந்து, வரவேற்பு மேடையை பாகுபலி கப்பல் போன்று பிரமாண்டமாக அலங்கரித்து நடன குழுவினர்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். சினிமா பாணியில் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்ச்சியை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.</p>

Buy Now on CodeCanyon