Surprise Me!

மாற்றுத்திறனாளி மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

2025-09-06 8 Dailymotion

தஞ்சாவூர்: 2025-26 முதலமைச்சர் கோப்பைக்கான மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூரில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று (செப் 6) நடைபெற்றது.

இந்த போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மாற்றுத்திறனாளி வீரர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் பெயர் சொல்லி அழைத்து, அவர்களை உற்சாகமூட்டினார்.

இந்த செயல் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில் தடகளம், இறகுப்பந்து, கபடி, அடாப்டட் வாலிபால், எறிபந்து, மற்றும் சக்கர நாற்காலி மேசைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 3 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூபாய் ஆயிரமும் அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.

Buy Now on CodeCanyon