Surprise Me!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஸ்ரீ சென்னியம்மன் கோயிலுக்கு செல்ல தடை!

2025-09-14 6 Dailymotion

<p>திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நீப்பத்துறை ஸ்ரீ சென்னியம்மன் திருப்பாறை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.</p><p>தமிழகத்தில் பல்வேறு மாவட்டஙக்ளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், அணைக்கு வரும் மொத்த நீரையும் மாவட்ட நிர்வாகம் அப்படியே ஆற்றில் திறந்து விடுகிறது. இதனால், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணாமாக ஆற்றங்கரையோரம், இருக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p><p>தொடர்ந்து, தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சென்னியம்மன் திருப்பாரை (Sri Chennammal Kovil Thirupaarai) கோயிலுக்கு பக்தர்கள் செல்லக்கூடாது எனவும், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர். மேலும், அங்கு யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.  </p>

Buy Now on CodeCanyon