Surprise Me!

சாலையில் வீசப்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள் - வைரலாகும் வீடியோ!

2025-09-20 5 Dailymotion

<p>சேலம்: சத்திரம் அருகே ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பாலு. தேர்தல் பொறுப்பாளராக மொரப்பூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும், கட்சிப் பணி செய்யாதவர்களை நீக்கி விட்டு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். அதன்படி பகுதிகள், வட்டங்கள் பிரிக்கப்பட்டு 150 பேருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்தியில் இருப்பவர்கள் அவ்வப்போது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து புகார்களும் கொடுத்து வருகின்றனர். </p><p>இந்த நிலையில், அதிமுக உறுப்பினர் அட்டைகள் சாலையில் வீசப்பட்டு கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நான்கு ரோடு சத்திரம் அம்மா உணவகம் எதிரே ஐம்பதுக்கும் மேற்பட்ட அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகள் கிடந்தன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருக்கும் இந்த நேரத்தில் உறுப்பினர் அட்டைகள் சாலையில் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.</p>

Buy Now on CodeCanyon