<p>தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் நவராத்திரி பண்டிகை வரும் 22 ஆம் தேதி முதல் 9 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தஞ்சாவூரில் சாய் மலர் நாட்டியாலயா சார்பில் குழந்தைகளுக்கு சிவன், பார்வதி, விநாயகர், அஷ்ட லட்சுமி, ரெங்கநாதர் தாயார் அம்மாள், முருகன், வள்ளி, தெய்வானை, ராதா, கிருஷ்ணர், பால திரிபுரசுந்தரி அம்மன் மற்றும் மீனாட்சி அம்மன், சாய்பாபா, ஐயப்பன், கருமாரியம்மன் என வேடமிட்டு மனித நவராத்திரி பொம்மைகளை போன்று அமர வைக்கப்பட்டனர். தனியார் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p><p>இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் இராமநாதன், நடனப்பள்ளி ஆசிரியை நிரஞ்சனி, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மழலைகளின் அலங்காரத்தை கண்டு மகிழ்ந்தனர். இது குறித்து நடனப்பள்ளி ஆசிரியை நிரஞ்சனி கூறுகையில், “பொதுவாக வீட்டில் படிகளில் கொலு பொம்மைகளை வைத்து கொண்டாடுவது வழக்கம். இதில் புதிய முயற்சியாக சிறு குழந்தைகளை சாமியாக பாவித்து அவர்களை கொலுவாக அமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என கூறினார்.</p>