Surprise Me!

ஆந்திரா டூ சென்னை... விஜய்யை காண நடந்து வரும் ரசிகர்!

2025-09-22 20 Dailymotion

வேலூர்: நடிகர் விஜய்யை காண வேண்டும் என்ற ஆர்வத்தில், ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நடைபயணமாக வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் அவரது ரசிகர்கள் அனைவரது மனதிலும் இருப்பது எதார்த்தமான ஒன்று தான். ஆனால், அவரை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என்ற ஆசையில் ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் நடைபயணமாக வந்து கொண்டிருக்கிறார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் வந்தனா சேகர். இவருக்கு விஜய்யை நேரில் காண வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அந்த கனவை நினைவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜயவாடா நகரத்திலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், கடந்த வாரம் பயணத்தை தொடங்கிய அவர், தற்போது வேலூர் மாவட்டத்தை அடைந்துள்ளார். இதற்கிடையே, இவரது நடைபயணம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் ஒரு தீவிர விஜய் ரசிகர். அவரது படம் வெளியான முதல் நாளே முதல் காட்சியை பார்த்து விடுவேன். எந்த படம் வந்தாலும் விடமாட்டேன். அவரது நடிப்பை மட்டுமல்லாமல், அவரது சமூக பணிகளையும், தற்போது அரசியலில் காட்டும் ஈடுபாட்டையும் கண்டு நெகிழ்கிறேன்.

இந்நிலையில், அவரைக் காண வேண்டும் என்ற ஏக்கத்தில், இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளேன். என் கையில் பேனர், மனதில் உற்சாகம்.. இவையெல்லாம் விஜய் அண்ணாவை சந்திக்கும் நாள் வரை தொடரும்” எனத் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon