Surprise Me!

ஆயுத பூஜை சிறப்பு விருந்து: மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட தூய்மை பணியாளர்கள்!

2025-10-01 15 Dailymotion

<p>சென்னை: நாடு முழுவதும் தசரா பண்டிகையின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையும், பத்தாவது நாளான நாளை விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. </p><p>ஆனால், தமிழ்நாட்டில் ஒன்பதாவது நாளான இன்று சரஸ்வதி பூஜையும் நாளை ஆயுத பூஜையும் கொண்டாடுகின்றனர். ஆயுத பூஜை சிறப்பாக சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் சோழிங்கநல்லூர் மாமன்ற உறுப்பினர் சங்கர் ஏற்பாட்டில் சுமார் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பாணியாளர்களுக்கு இன்று (அக்.1) ஆயுத பூஜை தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் இனிப்புகள், பொறி, பழ வகைகள் உள்ளிட்ட பூஜை பொருள்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.</p><p>மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 1000க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சாதம், சாம்பார், ரசம், வெஜ்டேபிள் பிரியாணி, வடை, பாயாசம் உள்ளிட்ட பதார்த்தங்களுடன் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தூய்மை பணியாளர்கள் கூறுகையில், “ஆயுத பூஜை பண்டிகைக்காக பரிசு தொகுப்பு கொடுத்து, விருந்துக்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி. தினமும் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறோம். இன்று அதற்காக விருந்து வைத்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்றார். </p>

Buy Now on CodeCanyon