Surprise Me!

குல தெய்வ கோயிலில் நடிகர் தனுஷ்: கிடா வெட்டி சாமி தரிசனம்!

2025-10-05 16 Dailymotion

<p>தேனி: நடிகர் தனுஷ் குல தெய்வ கோயிலில் குடும்பத்துடன் கிடாவெட்டி சாமி தரிசனம் செய்தார்.  </p><p>நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்தினருடன் குல தெய்வ கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் அவரது சகோதரரும், இயக்குநருமான செல்வராகவன், தந்தை கஸ்தூரிராஜா, தாய் விஜயலட்சுமி, மகன்கள் லிங்கா, யாத்ரா உள்ளிட்டோர்களும் குல தெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.</p><p>முன்னதாக, நேற்று ஆண்டிபட்டி அருகே முத்து ரங்காபுரத்தில் உள்ள கஸ்தூரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த தனுஷ், அங்குள்ள ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்காமல் சென்றதற்கு கிராம மக்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று சங்கராபுரத்தில் பொது மக்களை செல்பி எடுக்க வைத்தும், குழந்தைகளை கொஞ்சியும் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும், தனியார் மண்டபத்தில் கிராம மக்கள் அனைவருக்கும் தனுஷ் உணவு ஏற்பாடு செய்திருந்தார்.  </p>

Buy Now on CodeCanyon