Surprise Me!

'தமிழ்நாட்ட சுத்தி பார்க்க போறேன்' - ஆட்டோவில் வலம் வரும் வெளிநாட்டினர்!

2025-10-07 9 Dailymotion

<p>செங்கல்பட்டு: இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், ஏற்காடு மற்றும் திருவண்ணாமலைக்கு ஆட்டோவிலேயே சென்று அங்குள்ள புராதான சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர்.</p><p>இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 4 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தனர். கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கியிருந்து, இன்று (அக்.7) காலை 2 ஆட்டோக்களில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்களுக்கு தமிழக அரசின் சுற்றுலா வழிகாட்டி மதன் உதவியாக இருந்தார்.</p><p>முதலில் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன கற்சிற்பங்களை சுற்றிப் பார்த்த சுற்றுலா பயணிகள், அங்கிருந்து ஆட்டோ மூலம் புதுச்சேரி புறப்பட்டனர். சென்னையில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இவர்களது பயணம் வரும் 10 ஆம் தேதி மீண்டும் சென்னையிலேயே முடிவடைகிறது.</p><p>இதற்கிடையே, புதுச்சேரியில், தஞ்சாவூர், ஏற்காடு, திருவண்ணாமலை சென்று அங்கிருந்து இறுதியாக சென்னை செல்கின்றனர். இது குறித்து தமிழக அரசின் சுற்றுலா வழிகாட்டி மதன் கூறுகையில், “ இங்கிலாந்தில் இருந்த வந்த சுற்றுலா பயணிகள், 5 நாட்களும் ஆட்டோவிலேயே சென்று சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதை அவர்கள் சந்தோஷமாக கருதுகின்றனர்” என்றார்.</p>

Buy Now on CodeCanyon