<p>தூத்துக்குடி: 'வாழை' திரைப்பட நடிகை திவ்யா துரைசாமி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் இருந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.</p><p>முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியன் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலின் குடமுழுக்கு விழாவிற்கு பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சினிமா பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.</p><p>இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை திவ்யா துரைசாமி இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். பின்பு கோயிலுக்குள் சென்ற அவர் முருகன், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள் என அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, வெளியே வந்த அவருடன் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.</p>