Surprise Me!

பெண்ணிடம் கவரிங் செயினை பறித்து சென்ற மர்ம நபர்கள்: வைலாகும் வீடியோ!

2025-10-11 15 Dailymotion

<p>கோயம்புத்தூர்: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>பொள்ளாச்சி இருந்து திருச்சூர் செல்லும் வழியில் உள்ள திவான்சா புதூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் சாலையில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து விட்டு வேகமாக சென்றனர்.</p><p>இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது, அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் செயினை பறிகொடுத்த அந்த பெண்மணிக்கு நகை பறிபோனது தொடர்பாக சிறிதும் கவலையில்லை தொடர்ந்து நடந்து சென்றுள்ளார். விசாரணையில் அது கவரிங் நகை என தெரியவந்துள்ளது.</p><p>மேலும், ஆனைமலை பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பில்  ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக ஆனைமலை போலீசார் தெரிவித்துள்ளனர். பெண்கள் தனியாக நடந்து செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். </p>

Buy Now on CodeCanyon