Surprise Me!

தடபுடல் விருந்து... புத்தாடை... மத்தாப்பூ! - மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த அமைச்சர் கீதா ஜீவன்

2025-10-11 1 Dailymotion

தூத்துக்குடி: தடபுடல் விருந்து, புத்தாடை என மாற்றுத்திறனாளி மாணவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிதோடு, அவர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடியுள்ளார் அமைச்சர் கீதா ஜீவன்.

தீபாவளி பண்டிகையானது அக்.20 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் ‘அன்பு கரங்கள் திட்டம்’ மூலம் பயன்பெறும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை மகிழ்விக்கும் விதமாக, அவர்களுடன் இணைந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (அக்.11) தீபாவளியை கொண்டாடினார்.

இந்நிகழ்வில், மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் என 200க்கும் மேற்பட்டோரை அழைத்துச் சென்று, முதலில் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் அறுசுவை உணவுடன் தடல்புடல் விருந்தளிந்தார்.

தொடர்ந்து, அனைவரையும் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்று மாணவ, மாணவிகள் விரும்பும் புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து மகிழ்வித்தார். அதனையடுத்து, கடலில் விளையாட வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அனைவரையும் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அலைகளுடன் விளையாடியதோடு, பட்டாசு வெடித்து, மத்தாப்பு சுற்றி தீபாவளி பண்டிகையை அனைவரும் உற்சாகமாக கொண்டாடினர்.

இன்று ஒரு நாள் முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய அமைச்சரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Buy Now on CodeCanyon