Surprise Me!

பருவமழைக்கு முன்பே நிரம்பிய தாமல் ஏரி; உற்சாக குளியல் போட்ட சிறுவர்கள்!

2025-10-12 14 Dailymotion

<p>காஞ்சிபுரம்: பருவமழை தொடங்குவதற்கு முன்பே தாமல் ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.</p><p>காஞ்சிபுரம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக திகழும் நிலையில், அங்குள்ள மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பொன்னை அணைக்கட்டிலிருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.</p><p>இதனால், தாமல் ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டியுள்ளது. ஆகையால், உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது. அப்படி மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்.</p><p>அதுமட்டுமின்றி, பருவமழை தொடங்குவதற்கு முன்பே தாமல் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் மூலம் வெளியேறும் தண்ணீர், பிற ஏரிகளுக்கும் திருப்பி விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon