<p>காஞ்சிபுரம்: சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்கதிரை கைகளில் ஏந்தியபடி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது.</p><p>காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தை அடுத்த எச்சூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யபட்டு வருகிறது. இந்த நிலையில் எச்சூர் ஊராட்சியில் உட்பட்ட A-Block மற்றும் B-Block-ல் உள்ள பயிர் செய்யும் நஞ்சை நிலங்களில் சிப்காட் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p><p>இதனால் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத இருக்க எச்சூர் நஞ்சை நிலங்களை சிப்காட் நிறுவனம் எடுக்ககூடாது என தொரிவித்து அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் நெற்கதிர்களுடனும், விவசாயத்தை காப்போம், விவசாய நிலத்தை மீட்போம் எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பேரணியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தனர். </p><p>இதனையெடுத்து, காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தனித்தனியே அனைவரும் மனு அளித்து செல்ல உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து பகுதி பகுதியாக ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டு மனு அளித்து சென்றனர். </p>