<p>காஞ்சிபுரம்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, பாலாற்றில் இருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.</p><p>காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் இருந்து பெறப்படும் நீர், குடிநீராக சுத்திகரிக்கப்பட்டு சென்னை முழுவதும், குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. </p><p>இதில், தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நின்றதால், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து தண்ணீர் வீணாவதை வேண்டும் என வலிறுத்தியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.</p>