Surprise Me!

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு! விவசாயிகள் மகிழ்ச்சி!

2025-10-14 9 Dailymotion

<p>தேனி: தொடர் மழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 76 அடியில் இருந்து 86 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். </p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கும் நீர் ஆதாரமாகவும் உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் நீர்மட்டம் 67 அடியாக குறைந்து காணப்பட்டது.</p><p>இந்த நிலையில், கடந்த 4 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 76 அடியாக உயர்ந்தது. மேலும், நேற்று பகல் மற்றும் இரவு நேரத்தில் அணையில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் 76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 86.42 அடியாக உயர்ந்துள்ளது.</p><p>இதனால், அணையின் நீர்மட்டம் ஒரே நாள் இரவில் 10 அடி உயர்ந்து உள்ளது. சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் தற்பொழுது 86.42 அடியாக உள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 112 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon