<p>வேலூர்: தொடர் கனமழையால் பேருந்து நிலையம், தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியது. </p><p>வேலூர் மாவட்டத்தில் நேற்றிரவு தொடங்கி இன்று காலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், சாலைகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கின்றது. </p><p>இதனால் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் இடையூருக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு மழை நீரில் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். </p><p>மேலும், மாநகரின் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலும் உருவாகியுள்ளது. </p>