தென்காசி: தொடர் கனமழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது.

தென்காசி மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராயகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ராயகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட மேலகரைசல் குளம் இந்திரா குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை உடனடியாக வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விடிய விடிய பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மழை நீரும், சாக்கடையும் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தீபாவளி விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோர வியாபாரிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.