Surprise Me!

கும்பக்கரை அருவியில் வெள்ளம்!12-வது நாளாக குளிக்க தடை!

2025-10-22 0 Dailymotion

<p>தேனி: நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு 12-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.</p><p>தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாத காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க 12-வது நாளாக இன்றும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். </p><p>மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீராகும் வரையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தொடரும் என தேவதானப்பட்டி வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.</p><p>இதே போல், கம்பம் அருகே சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஐந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. </p>

Buy Now on CodeCanyon