Surprise Me!

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது விபரீதம்: துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசார்!

2025-10-23 12 Dailymotion

<p>வேலூர்: ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை, துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p><p>வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள விருதம்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் வனிதா (28). இவர் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி நேற்று சென்ற டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சித்துள்ளார். ஆனால் ரயிலில் அதிகப்படியாக கூட்டம் இருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. அவர் ரயிலின் கதவுக் கம்பியை பிடித்து தொங்கிய நிலையில் நிற்க முயற்சித்த போது, ரயில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது. </p><p>ரயில் நிலையத்திலிருந்து குறைந்த வேகத்தில் சென்ற ரயிலில் தொங்கியபடி சென்ற வனிதாவை பார்த்த ரயில்வே போலீசார், அவரை பிடித்து இழுத்து, பாதுகாப்பாக நடைமேடையில் அமர வைத்தார். இந்த சம்பவம் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.</p><p>இந்நிகழ்வுக்கு பிறகு வனிதாவை சமாதானப்படுத்திய போலீசார், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். </p>

Buy Now on CodeCanyon