Surprise Me!

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: தரைப்பாலத்தில் இரண்டாவது முறையாக போக்குவரத்து தடை!

2025-10-27 6 Dailymotion

காஞ்சிபுரம்: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தற்போது கீழ்மட்ட பாலத்தின் மேல் வெள்ள நீர் செல்வதால் வாலாஜாபாத் - அவளூர் பாலம் இரண்டாவது முறையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், வாலாஜாபாத் பாலாற்றில் 15,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இருந்து அவளூர் கிராமத்துக்கு செல்லக்கூடிய கீழ்மட்ட பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தில் மேல் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவளூர், இளையரார், வேலூர், காலூர், சாலவாக்கம் உள்ளிட 20- க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு போக்குவரத்து துண்டிக்கபட்டது. பாலம் போக்குவரத்து துண்டிப்பால் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான்  சுமார் ரூ. 1 கோடி செலவில் இந்தப் பாலம் சீரமைக்கபட்டது.

பாலம் சீரமைக்கும் பணி நடைபெறும் பொழுது, உயர்மட்ட பாலம் வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தும் வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், இப்போது அதிகம் தண்ணீர் வந்ததும் பாலமே மூழ்கிவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தொடர் கனமழையின் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் அதிக நீர் பாலாற்றில் திறக்கபட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அவலூர் செல்லும் தரைப்பாளத்தில் 15 ஆயிரம் கன அடி நீர் செல்வதால் இரண்டாவது முறையாக போக்குவரத்து துண்டிக்கபட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வேலைக்கு செல்வோர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலம் முழுவதுமாகவே மூழ்கடித்து செல்வதால் பாதுகாப்பு கருத்தில்கொண்டு நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டது.

Buy Now on CodeCanyon