Surprise Me!

அரசு மருத்துவமனையில் பல மணி நேரம் மின்தடை - மருத்துவப் பயனாளிகள் அவதி!

2025-11-04 2 Dailymotion

<p>திருவண்ணாமலை: செய்யாறு அரசு தலைமைக் மருத்துவமனையில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாததால் மருத்துவப் பயனாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.  </p><p>இன்று அதிகாலை தடைபட்ட மின்சாரம் மதியம் வரை வராததால், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வார்டுகளிலும் இருந்த மருத்துவப் பயனாளிகளும், குழந்தைகளும் மிகுந்த சங்கடத்திற்கு ஆளாகினர். </p><p>ஏற்கேனவே இந்த மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உள்ளிட்டவை செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக பராமரிக்கப்படாததால் ஜெனரேட்டரும் இயங்கவில்லை. கடந்த சில மாதங்களில் இது போன்ற பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவர், செவிலியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும், பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். </p><p>அதிகாலை முதல் மின்தடை நிலவியதால், செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த மக்கள் சிகிச்சை பெற பெற முடியாமல் திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்யாறு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். </p>

Buy Now on CodeCanyon