Surprise Me!

கோயம்பேடு மார்க்கெட்டில் மனித எழும்புக்கூடு கிடைத்ததால் பரபரப்பு: போலீசார் விசாரணை!

2025-11-08 6 Dailymotion

<p>சென்னை: கோயம்பேடு மார்க்கெட் கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சென்னை கோயம்பேடு மார்க்கெட் 18வது கேட் பகுதியில் கழிவுநீர் கால்வாயை MMC ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை செய்துள்ளனர். அப்போது கால்வாயில் இருந்து கழிவுகளை அகற்றும் போது மனித கையெலும்பு, கால் எலும்பு மற்றும் மண்டை ஓடு கிடைத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், உடனடியாக இது தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  </p><p>இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் மண்டை ஓடுகளை கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே அந்த எலும்புக்கூடு ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்று தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  </p><p>இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன. அதே சமயம் பரபரப்பான கோயம்பேடு சந்தையில் திடீரென கழிவுநீர் கால்வாயில் இருந்து மனித எலும்புக்கூடு எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.</p>

Buy Now on CodeCanyon