<p>காஞ்சிபுரம்: பிரபல இனிப்பு கடையில் மிக்சர் டப்பாவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.</p><p>பாரம்பரிய சைவ உணவு கடையான 'ஸ்ரீ குப்தா பவன்' காஞ்சிபுரம் நகரின் அடையாளமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதன் வளமான உணவு மட்டுமில்லாமல், அதன் இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை இந்தியாவை கடந்து உலக அளவில் புகழ்பெற்றது. </p><p>இந்த இனிப்பு கடை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகர் பகுதிகளில் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நெல்லிக்காரை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குப்தா தனியார் இனிப்பு கடையில் நேற்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விக்கி என்பவர் இனிப்பு வாங்க கடைக்கு சென்றுள்ளார். </p><p>அப்போது மிக்சர் டப்பாவில் கரப்பான் பூச்சி இங்கும் அங்குமாய் ஓடிக்கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக ஊழியரை அழைத்து புகார் தெரிவித்த நிலையில் ஊழியர் கண்டும் காணாமல் அலட்சியமாக இருந்ததாக வாடிக்கையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.</p>
