Surprise Me!

பூட்டை உடைத்து திருட்டு: நகை, பணம் இல்லாததால் LED டிவியை தூக்கி சென்ற அவலம்!

2025-11-23 2 Dailymotion

<p>அரியலூர்: செங்குந்தபுரம் கிராமத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்(51), செல்வராசு(51). இவர்கள் இருவரின் வீடும் அருகருகே உள்ளது. வேல்முருகன் ஓசூரில் குடும்பத்துடன் தங்கி வாகன உதிரிப்பாகம் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். மேலும், செல்வராசு தனது மகளுக்கு வீடு கட்டும் பணி நடைபெறுவதால், பாண்டிச்சேரியில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.</p><p>இந்நிலையில், இரு வீட்டிலும் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து, வீட்டிற்குள் இருந்த பீரோ உடைத்து பார்த்தபோது, அதில் எதுவுமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதனால், விரக்தியடைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த LED டிவியை மட்டும் எடுத்து சென்றதாக தெரிகிறது.</p><p>இந்த நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர், வேல்முருகன் மற்றும் செல்வராசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இருவரது உறவினர்களும் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை துணியால் மூடிய பின்னரே, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் 2 வீடுகளிலும் இருந்த தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.</p>

Buy Now on CodeCanyon