Surprise Me!

வெளுத்து வாங்கும் மழை: மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

2025-11-24 6 Dailymotion

<p>திருநெல்வேலி: கனமழை காரணமாக மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாகவும், தென் இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. </p><p>143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 129.55 அடியாக உயர்ந்தது. 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணையும் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து, 149.24 அடியாகவும், 118 அடி கொள்ளவு கொண்ட மணிமுத்தாறு அணை, 4 அடி உயர்ந்து 103.05 அடியாகவும் உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஊத்துவில் 23.2 சென்டிமீட்டரும், நாலுமுக்கு பகுதியில் 22 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.</p><p>கனமழை காரணமாக அம்பாசமுத்திரம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பாபநாசம், அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணம் கருதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் களக்காடு தலையணை, திருக்குறுங்குடி நம்பிகோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>

Buy Now on CodeCanyon