Surprise Me!

தீவிரமடையும் 'டிட்வா' புயல்: விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர ஆய்வு

2025-11-29 10 Dailymotion

<p>விழுப்புரம்: 'டிட்வா' புயலால் கனமழை பெய்து வரும் சூழலில், கடலோர பகுதிகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.</p><p>இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதனால், கோட்டகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார் சாவடியில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p><p>இந்த நிலையில், தேங்கியுள்ள மழை நீரை மின் மோட்டார் மூலம் உடனுக்குடன் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணியினை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். மேலும், மழை தேங்காதவாறு உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.</p><p>அதனைத் தொடர்ந்து கோட்டகுப்பம், ஆரோவில், சந்திரன் குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை பார்வையிட்ட அவர், அவர்களுக்கு வேண்டிய உணவுகள் போன்ற அடிப்படை தேவைகள் உடனுக்குடன் வழங்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.</p>

Buy Now on CodeCanyon