Surprise Me!

டிட்வா புயலால் கொந்தளித்த கடல்: ஆபத்தை உணராமல் ஆட்டம்போட்ட சுற்றுலாப் பயணிகள்

2025-11-30 9 Dailymotion

<p>விழுப்புரம்: கொந்தளிக்கும் கடலில் ஆபத்தை உணராமல் குளித்து ஆட்டம்போட்ட சுற்றுலாப் பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.</p><p>வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயலால், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், விழுப்புரத்தில் உள்ள கடல்கள் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.</p><p>புயல் வலுவடைந்து வரும் நிலையில் மழை குறைந்தாலும், கடல் சீற்றம் அதிகளவில் காணப்படுகிறது. இந்த நிலையில், விழுப்புரத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக உள்ள ஆரோவில் கடற்கரை, தந்திரியான் குப்பம், பொம்மையார்பாளையம் உள்ளிட்ட கடற்கரைகளில் புயலின் எச்சரிக்கையை மீறியும், ஆபத்தை உணராமலும் சுற்றுலாப் பயணிகள் குளித்தும், விளையாடியும் வருகின்றனர். அதில் சிலர் கடலில் இறங்கி செல்ஃபி எடுத்து வந்தனர். அதனைக்கண்ட கோட்டகுப்பம் போலீசார், கடலில் சீற்றம் உள்ள நிலையில் இப்படி பொறுப்பில்லாமல் உள்ளீர்கள் என எச்சரித்து சுற்றுலாப் பயணிகளை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.</p>

Buy Now on CodeCanyon