<p>திருவண்ணாமலை: ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர் காய்கறிகளை பயன்படுத்தி ரஜினியின் உருவப்படத்தை வடிவமைத்து அசத்தியுள்ளார். </p><p>நடிகர் ரஜினிகாந்த் தனது 75-வது பிறந்தாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘படையப்பா’ படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் தனது பிறந்தநாளை ’ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.</p><p>இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ஓவியரும், ரஜினியின் ரசிகருமான ஹரிஷ் பாபு, 10 கிலோ பீன்ஸ், 1 கிலோ கேரட் காய்களை பயன்படுத்தி தத்ரூபமாக ரஜினியின் உருவப்படத்தை வடிவமைத்துள்ளார். அதன் கீழே 50 ஆண்டு ரஜினியிஸம் என்று காய்கறிகளால் எழுதியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாககி வைரலாகி வருகிறது.</p><p>ஹரிஷ் பாபு கடந்த 20 ஆண்டுகளாக, அரிசி, காய்கறிகள், இலைகள், பேப்பர்கள் போன்றவற்றை பயன்படுத்தி தத்ரூபமாக பல ஓவியங்களை வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
