Surprise Me!

கும்பகோணம் டூ குமுளி - பேருந்து சேவை தொடக்கம்

2025-12-15 10 Dailymotion

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இருந்து குமுளிக்கு புதிய அரசு பேருந்து சேவையை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை க. அன்பழகன் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கும்பகோணத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக குமுளி சென்றடையும். புதிய பேருந்து சேவை தொடக்க விழா கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிய்ல் மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன் உட்பட உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்

தினமும் காலை 6.15 மணிக்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் இந்த பேருந்து, திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் வழியாக மாலை 4:30 மணிக்கு குமுளியை சென்றடையும். பின்னர் மீண்டும் அதே பேருந்து மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் விடியற்காலை கும்பகோணம் வந்தடையும்.

இந்த பேருந்து திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம் ஆகிய இடங்களில் மட்டுமே நிற்கும். சபரிமலை ஐயப்பன் சீசன் காலம் என்பதால், இந்த பேருந்து சேவைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

Buy Now on CodeCanyon