Surprise Me!

வெறி நாய் கடித்ததில் 10 ஆடுகள் பலி

2025-12-16 4 Dailymotion

<p>அரியலூர்: கூத்தக்குடி கிராமத்தில் சுற்றித் திரிந்த வெறி நாய் கடித்ததில் 10 ஆடுகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p><p>அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகள் சங்கரி 40. இவர் உடல் குறைபாட்டுடன் தனிமையில் வசித்து வருகிறார். இவர் ஆடுகளை மேய்த்தும், சில கூலி வேலைக்கு சென்றும் மருந்து மாத்திரைகள் வாங்கி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் வளரத்த 10 ஆடுகளை நேற்று இரவு வெறி நாய் கடித்ததில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள 10 ஆடுகள் மற்றும் இரண்டு குட்டிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.</p><p>அதனைத் தொடர்ந்து தா.பழூர் பகுதியில் நாய் கடியால் இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆடுகளுக்கும் மனிதர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தா. பழூர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். </p>

Buy Now on CodeCanyon