<p>அரியலூர்: தடை செய்யப்பட்ட நேரத்தில் டிப்பர் லாரி இயக்கப்பட்டதால் பால் வண்டி மீது மோதி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். </p><p>அரியலூர் நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் இயக்க காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், அதே போல் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தினந்தோறும் ஆண்டிமடத்தில் இருந்து செந்துறை வரை விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து வருகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் குறிச்சி கிராமத்தில் உள்ள நிறுவனத்திற்கு பால் எடுத்து செல்வது வழக்கம். அதே போல் இன்று காலையும் பால் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.</p><p>அப்போது, செந்துறை பேருந்து நிலையம் அருகே பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி பால் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சதீஷ் வாகனத்தின் உள்ளேயே சிக்கிக் கொண்டார். இதனைப் பார்த்த அக்கம்பக்கதினர் உடனடியாக சதீஷை பத்திரமாக மீட்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். </p>
