Surprise Me!

கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

2026-01-10 9 Dailymotion

<p>தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் கல்லூரியில் மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.</p><p>தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. </p><p>கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பாரம்பரிய வேட்டி சேலை உடுத்தி, ஓலை குடிசைகள் அமைத்து தென்னங்கீற்றில் தோரணம் கட்டி, சர்க்கரை பொங்கல் செய்து பொங்கலோ பொங்கல் என்று கூறி உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பின்னர் அதைத் தொடர்ந்து சினிமா பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்களை பாடியும் ஆடியும் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவில் கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். </p><p>இதையடுத்து தஞ்சாவூரில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் உள்ள கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், மாடு ஆட்டம், நடனக் குதிரை மற்றும் ஒட்டகம் உள்ளிட்ட பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றது. </p>

Buy Now on CodeCanyon