Surprise Me!

மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடை; பக்தர்கள் ஏமாற்றம்

2026-01-11 6 Dailymotion

விருதுநகர்: தொடர் மழை காரணமாக, சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்று நம்பப்படுவதால், பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம். மேலும், இங்கு சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாகக் கூறப்படுவதால், இது சித்திரங்களின் சொர்க்க பூமி என்றும் அழைக்கப்படுகிறது.

இதனால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மழை பாதிப்பு அல்லாத நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி உண்டு.

தற்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சதுரகிரி மலைப்பகுதிகளிலும் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகையால், பாதுகாப்பு கருதி இன்று (ஜன.11) சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதியிலிருந்து சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Buy Now on CodeCanyon